CINEMA
இணையத்தை கலக்கும் தல அஜித்தின் SELFIE வீடியோ…. வைரலாக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் அஜித் கடைசியாக விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமா தவிர்த்து கார், பைக் பிரியரான நடிகர் அஜித் அடுத்தடுத்து கார் மற்றும் பைக்குகளை வாங்கி குவித்து வருகிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய மனைவி ஷாலினி விலை உயர்ந்த Ducati பைக் ஒன்றை பரிசளித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 9 கோடி ரூபாய் மதிப்பிலான Ferrari கார் ஒன்றை அஜித் வாங்கியிருந்தார். தற்போது Porsche gt3 என்ற 4 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். அவ்வப்போது அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது புதிய கார் பந்தய அணியையும் தொடங்க இருக்கிறார். இந்நிலையில் ஷோ ரூம் ஒன்றில் இவர் செல்பிஎடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1839689797889347666