LATEST NEWS
அன்று நடந்த ஆக்சிடென்ட்….. கார்த்திக்கின் தலையெழுத்தை மாற்றிய சம்பவம்….. சுவாரஸ்ய கதை….!!!

அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக் 80s 90s காலகட்டத்தில் பிரபலமாக நடித்து வந்த இவர் தற்போது வரை பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவரின் நடை, உடை, பாவனை அனைத்தும் வித்யாசமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் இவர் பேசுவதே பலருக்கும் வித்தியாசமாக இருக்கும், செல்லமாக தமிழை கொஞ்சி கொஞ்சி பேசுவார். இவர் எப்படி நடிகரானார் என்பதுதான் ஒரு ஆச்சரியம்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கிய படம் அலைகள் ஓய்வதில்லை. அப்போது சமூகம் தொடர்பான கருத்தை கூறிய போதிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில் தன்னுடைய உதவியுடன் மணிவண்ணனின் கதைக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து பாரதிராஜா இந்த படத்தை எடுத்தார். அப்போது பழம் பெறும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக், ராதா ஆகியோரும் இந்த திரைப்படத்தில் நடிகர்களாக அறிமுகமானார்கள்.
ஆனால் கார்த்திக் இந்த திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக தேர்வாகவில்லை. கதைகேற்ற நாயகனே பள்ளிகள் கல்லூரிகள் கடற்கரை என்று பல இடங்களில் தேடினர். படப்பிடிப்பு துவங்க சில நாட்களுக்கு முன்னதாக ஆதர்ஷ் வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்த ஒரு பையன் தான் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிக்க பட குழுவினர் தேர்வு செய்தனர், இருப்பினும் பெரிய அளவு திருப்தி ஏற்படவில்லை. தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலும் இருந்தது ஒரு இடத்தில் கார் ஓட்டிக் கொண்டிருந்த பாரதிராஜா விபத்தில் சிக்கினார்.
அப்போது அடிபட்ட அவரை ஒரு பையன் அழைத்துக்கொண்டு போயஸ் தோட்டத்தின் அருகே ஒரு மருத்துவரிடம் சேர்த்துள்ளார். அங்கு முத்துராமன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து தான் இவர் அந்த திரைப்படத்தின் கதாநாயகனாக தேர்வு செய்தார். அப்போது முரளியாக இருந்த கார்த்திக்கிடம் பாரதிராஜா தனது தொலைபேசி எண்ணினை கொடுத்து முத்துராமனை வீட்டிற்கு வரவழைத்து அவரிடம் பேசி கார்த்திகை இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தார்கள். இப்படித்தான் நடிகர் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமானார்.