பிரபலமான முன்னணி நடிகர் எஸ் வி சேகரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… - Cinefeeds
Connect with us

Uncategorized

பிரபலமான முன்னணி நடிகர் எஸ் வி சேகரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களின் ஒருவர்  நடிகர் எஸ் வி சேகர் இவர் 1950 டிசம்பர் 26 ஆம் தேதி பிறந்தார்.

இவரின் முழு பெயர் சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ மற்றும் ஏர் கண்டிஷனிங் மற்றும் குளிர்பதனப் பிரிவில் டிப்ளமோ முடித்தார்.

இவர் ஒலிப்பதிவாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், நிகழ்படமெடுப்பது, தொகுத்தல், இயக்குதல், என பல்வேறு தொழில்களை செய்துள்ளார்.

இவர் “நாரதர்” தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணியறியுள்ளார்.வானொலி நிகழ்ச்சிகள் தயாரிப்பு, நாடகங்களுக்காக சிறப்பு ஒலிகள் தயாரிப்பு, நாடக சம்பத்தப்பட்ட விசயங்களில் கைதேர்ந்தவர்.

1974ஆம் ஆண்டு  நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்துள்ளார். 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார்.

இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி பயிற்சிபெறுபவர்களின் கூட்டமைப்பிலிருந்து, சிறந்த அனைத்திந்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருதுகளை  தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பெற்றிருக்கிறார்.

இவர்  இலங்கை  வானொலிக்காக  275 க்கும்  மேற்பட்ட  ஒலிச்சித்திரங்களை தயாரித்திருக்கிறார்.

SV Sekar Son Wedding Reception Stills

இவர் மேகம் என்ற படத்தில் ஸ்டில் போட்டோகிராபராக சினிமா துறையில் அறிமுகமானார். அதன் பிறகு  1979 ஆம் ஆண்டு கே பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற படத்தில்  விருந்தினர் தோற்றத்தில் நடித்தார்.

SV Sekar Son Wedding Reception Stills

இவர் தமிழ்  மணல் கயிறு, கோபுரங்கள் சாய்வதில்லை, உருவங்கள் மாறலாம் ,வரதட்சணை கல்யாணம் ,ராஜா வீட்டு கண்ணுக்குட்டி,

பூவே பூச்சூடவா ,கோடை மழை ,காதல் டாட் காம், வல்லவன், நினைவில் நின்றவ,ள் வேகம், அரசாட்சி ,ஜித்தன், ரிஷி போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களுக்கான மத்திய தணிக்கை குழுவில் மாநில தலைவராக பணியாற்றியிருக்கிறார்.

நடிகர் எஸ் வி சேகர் இசையமைப்பாளர் ஜி ராமநாதனின் பேத்தி உமாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அனுராதா என்ற மகளும் ,அஷ்வின் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர் மகன் அஷ்வின் தமிழ் சினிமாவில் ‘வேகம்’ படத்தின் மூலமாக  தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.