CINEMA
சுசித்ரா…! உங்கள என் சகோதரியாக நினச்சு கேக்குறேன்…. வெடிகுண்டை போடாதீங்க…. வேண்டுகோள் விடுத்த பிரபலம்…!!

பிரபல பாடகி ஆன சுசித்ரா யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் இப்படி பிசியாக இருந்த சுசித்ரா கடந்த 2017 வருடம் திடீரென்று சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர்க ; பலரின் அந்தரங்க வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியானதால் திரை உலகமே அதிர்ந்தது. இதனை அடுத்து தன்னுடைய twitter கணக்கு யாரோ ஹேக் செய்து அதில் இருந்து புகைப்படத்தின் வீடியோக்களின் வெளியிட்டுவிட்டார்கள் என்று போலீசில் புகார் மனு அளித்து இருந்தார் சுசித்ரா.
அதன் பிறகு அவருக்கு மனநிலை சரியில்லை என்றும் அப்போது தகவல் பரவியது .இதனை அடுத்து சுசித்ரா தன்னுடைய கணவரிடம் இருந்து விவகாரத்தை பெற்றுக்கொண்டார். தற்போது தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சுசித்ரா அவ்வப்போது ஒரு சில பிரபலங்களை பற்றி பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் வலைப்பேச்சு அந்தணன், என்னுடைய சகோதரியாக நினைத்து சுசித்ராவிடம் கேட்டுக்கொள்கிறேன். யாரை பற்றியும் வெடிகுண்டுகளை போடாதீங்க. வேறொரு நோக்கத்தோடு ஒரு சிலர் இதுபோன்ற கேள்விகளை உங்ககிட்ட கேட்கிறாங்க