VIDEOS
மேடையில் ஆங்கிலத்தில் பேசிய மகன்.. தமிழ்ல பேசுப்பானு சொல்லி கலாய்த்த ஏ.ஆர் ரகுமான்.. தீயாய் பரவும் வீடியோ..!!

இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தமிழ் மற்றும் ஆங்கிலம் என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதே சமயம் இரண்டு ஆஸ்கார் விருதை குறித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் இவர்தான்.
இவர் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ராம் பானு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு அமீன் என்ற மகனும் கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி கோவையில் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் மேடைக்கு வந்த தன்னுடைய மகனிடம் பயமா இருக்கா இல்ல உற்சாகமா இருக்கா, பொண்ணுங்க எல்லாம் பாத்துட்டு இருக்காங்க என்று ஏ ஆர் ரகுமான் சொன்னதும் ஆங்கிலத்தில் அமீன் பேசி உள்ளார். உடனே ஏ ஆர் ரகுமான் தமிழ்ல பேசுப்பா என்று கூற அங்கிருந்த ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Thalaivar fun😄 @arrahman #ARRahmanConcert #ARRahman #ARR pic.twitter.com/fMRKVr0XHw
— Drake (@bat231_) August 22, 2023