மம்தா பானர்ஜியை கத்தியால் குத்த முயற்சி..? சேலையை பிடித்து இழுத்து பெண் செய்த் காரியம்… பெரும் பரபரப்பு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மம்தா பானர்ஜியை கத்தியால் குத்த முயற்சி..? சேலையை பிடித்து இழுத்து பெண் செய்த் காரியம்… பெரும் பரபரப்பு..!

Published

on

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது கொல்கத்தாவில் கத்தியால் தாக்க முயற்சி நடைபெற்றதாகதிரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகம் தரப்பில் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா காளிகாட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்பகுதியில் உள்ள துர்கா பூஜை பந்தலைத் திறந்து வைப்பதற்காக மம்தா பானர்ஜி தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது தனிஷ்டா சாஹா என அடையாளம் காணப்பட்ட பெண் ஒருவர், தன்னை மம்தாவின் உறவினர் என்று கூறிக்கொண்டு பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய முயன்றுள்ளார். மம்தாவின் சேலையைப் பிடித்து இழுக்க முயன்ற அந்தப் பெண், சாலையில் விழுந்து தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கியுள்ளார்.

Advertisement

உடனடியாக அங்கிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அந்தப் பெண்ணைப் பிடித்துக் காளிகாட் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்தப் பெண்ணிடம் கத்தி ஒன்று இருந்ததும், அவர் போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், இதில் ஏதேனும் சதி உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in