நிர்மல்குமார் இனி “Collection குமார்”.. அமைச்சர் நிர்மல்குமாருக்கு புதிய பெயர் வைத்த செந்தில்பாலாஜி.. தமிழக அரசியலில் வெடித்த மோதல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நிர்மல்குமார் இனி “Collection குமார்”.. அமைச்சர் நிர்மல்குமாருக்கு புதிய பெயர் வைத்த செந்தில்பாலாஜி.. தமிழக அரசியலில் வெடித்த மோதல்..!!

Published

on

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் மின்சாரக் கொள்முதல் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் நீண்ட கால ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்ற பொய்யான தகவல்களைத் தொடர்ந்து பரப்ப வேண்டாம் கலெக்ஷன் குமார் சாரி நிர்மல்குமார் அவர்களே என்றும், ஒரு நாளாவது உண்மை பேசுங்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்சாரக் கொள்முதலில், நீண்ட கால மற்றும் நடுத்தர காலக் கொள்முதல் மொத்தம் 6,240 மெகாவாட் ஆகும். இதில், கடந்த 2021-2026 திமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் 2,825 மெகாவாட் மின்சாரக் கொள்முதலுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்ற அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை செந்தில் பாலாஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

முந்தைய திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து முழுமையாகத் தெரியாவிட்டால், மின்சாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டு முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு பேசுமாறு அமைச்சர் நிர்மல் குமாருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், திறந்தவெளியில் அதிக விலைக்கு (யூனிட் ரூ.35) மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதைக் கண்டித்து, அமைச்சரை ‘கலெக்‌ஷன் குமார்’ என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in