CINEMA
வாழை Vs கொட்டுக்காளி…. வசூலில் வின்னர் யாரு தெரியுமா….? வெளியான தகவல்…!!

மாரி செல்வராஜின் ‘வாழை’, வினோத் ராஜின் ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்கள் நேற்று வெளியாகின. இரு படங்களுக்கும் Positive விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, ‘வாழை’ படத்தை பிரபலங்கள் ஆஹா… ஓஹோ… என பாராட்டியுள்ளார்கள். இதில் இயக்குனர் மாரி செல்வராஜின் சிறுவயது வாழ்க்கை சம்பவத்தை கூறியுள்ளார்.
இந்த படத்தை பார்த்த திரைபிரபலங்கள் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் அழுது கொண்டே தான் திரையரங்கை விட்டு வெளியே வந்தார்கள். இந்நிலையில், இந்த படம் முதல் நாளில் ரூ.1.5 கோடியும், சூரியின் ‘கொட்டுக்காளி’ படம் ரூ.43.56 லட்சமும் வசூலித்ததாக கூறப்படுகிறது.