“அம்மாடியோ.. டீ குடித்துக்கொண்டிருந்தபோது வந்த எமன்..” காற்றில் பறந்த பைக்.. இளைஞருக்கு நடந்த மிராக்கிள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மாடியோ.. டீ குடித்துக்கொண்டிருந்தபோது வந்த எமன்..” காற்றில் பறந்த பைக்.. இளைஞருக்கு நடந்த மிராக்கிள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தேநீர் கடைக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அதிவேகமாக வந்த கார் மோதி நொடிப் பொழுதில் உயிர் தப்பிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கட்டுப்பாட்டை இழந்த அந்த வெள்ளை நிற கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இம்பேக்ட் காரணமாக பைக் தூக்கி வீசப்பட்ட போதிலும், அதன் மேல் அமர்ந்திருந்த இளைஞர் எவ்வித சிறு காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த கோர விபத்தின் போது தேநீர் கடைக்கு அருகே நாற்காலியில் அமர்ந்திருந்த மற்றொரு நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து காரை நிறுத்தாமல் தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in