CINEMA
தெறிக்கவிடும் G.O.A.T… Youtube-இல் சாதனை படைத்த “விசில் போடு” வீடியோ பாடல்….!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் GOAT. இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .வெங்கட் பிரபு முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த நிலையில் ரசிகர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் . யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவருமே நடித்திருந்தனர்.
இந்த படத்தின் “விசில் போடு” வீடியோ பாடல் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் ஓபனிங் பாடலான “விசில் போடு” கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அதன் தியேட்டரிக்கல் வெர்ஷன் மிரட்டியிருந்தது. மேலும், யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோரும் இந்த வெர்ஷனில் பாடி சர்ப்ரைஸ் கொடுத்தனர்.