“எல்லாம் முடிந்துவிட்டது..!” நள்ளிரவில் வந்த அந்த கடைசி போன் கால்.. சங்கிலியால் கால்கள் கட்டப்பட்டு புதுமண தம்பதியின் சடலங்கள்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“எல்லாம் முடிந்துவிட்டது..!” நள்ளிரவில் வந்த அந்த கடைசி போன் கால்.. சங்கிலியால் கால்கள் கட்டப்பட்டு புதுமண தம்பதியின் சடலங்கள்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் துலேமாவட்டத்தில் உள்ள தாபி ஆற்றில், கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இளம் தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ஜல்கான் மாவட்டத்தின் அமல்னர்தாலுகாவைச் சேர்ந்த ஷியாம் ஹரி பாட்டீல் (28) மற்றும் சப்னா பாட்டீல் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்த புதுமணத் தம்பதியினர், சவால்டே மற்றும் நர்தானா பகுதிக்கு இடைப்பட்ட ஆற்றுப்படுகையில் சடலமாக மிதந்ததைக் கண்டு உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட சடலங்களில், ஷியாமின் ஒரு காலும் சப்னாவின் ஒரு காலும் பெரிய இரும்புச் சங்கிலியால் ஒன்றாகக் கட்டப்பட்டு பூட்டுப் போடப்பட்டிருந்த விசித்திரமான காட்சி போலீசாரையே அதிர வைத்துள்ளது. இந்த மர்ம மரணங்கள் கௌரவக் கொலையா, தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் நர்தானா காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு அருகே தம்பதியினரின் இருசக்கர வாகனம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் ஷியாம் தனது உறவினர் ஒருவரைத் தொடர்புகொண்டு “எல்லாம் முடிந்துவிட்டது” என்று மனவேதனையுடன் பேசிய திடுக்கிடும் பின்னணியும் தற்போதைய விசாரணையில் வெளிவந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in