CRIME
பகீர்..! ஆடையைக் கிழிங்கடி அவளுக்கு..! மாணவிகள் மீது கொடூரத் தாக்குதல் நடாத்திய வெறிபிடித்த குடும்பம்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் அங்கலேஷ்வர் GIDC பகுதியில், 12-ஆம் வகுப்பு படிக்கும் இரு சகோதரிகள் மீது நடுரோட்டில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்கிருதி செங்கர் என்ற மாணவிக்கும், அவருடன் படிக்கும் ‘பெர்ல்’ என்ற மாணவிக்கும் இடையே பள்ளியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த மோதல் உருவாகியுள்ளது. இரு சகோதரிகளும் மோப்பட் வாகனத்தில் டியூஷனுக்குச் சென்று கொண்டிருந்தபோது, பெர்ல் தனது குடும்பத்தினருடன் வந்து அவர்கள் மீது வாகனத்தை மோதி கீழே தள்ளியுள்ளார்.
வாகனத்திலிருந்து கீழே விழுந்த சகோதரிகளை, பெர்லின் தந்தை தேவா பாய் கிரிக்கெட் பேட்டால் தலை, தோள்பட்டை மற்றும் கால்களில் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும் பெர்லின் தாய் மற்றும் பாட்டி ஆகியோர் இரு பெண்களையும் செருப்பால் அடித்து, தகாத வார்த்தைகளால் பேசி, ஆடைகளைக் கிழிக்க முயன்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த இரு சகோதரிகளும் கத்தி கூச்சலிடவே, அவர்களின் பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வருவதற்குள் தாக்குதல் நடத்திய குடும்பத்தினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
https://www.tv9hindi.com/videos
தற்போது படுகாயமடைந்த சகோதரிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, அங்கலேஷ்வர் GIDC காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகள் நான்கு பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
