Uncategorized
“உழைப்பாளர் உணவகம்” சென்னையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு… ‘குவியும் வாழ்த்துக்கள் எங்கு தெரியுமா’..?

சென்னை சாலிகிராமத்தில் வசிப்பவர் வீரபாகு இவர் தற்போது ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார் கடந்த சிலவரங்களாக இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது அப்படி என்ன உணவகம் என்றுபார்ப்போம்.
பொதுவாக உணவகத்தில் 80ரூபாய் முதல் 220வரை சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது மிகவும் சிரியக்கடை என்றால் 50ரூபாய்க்கு மேலதான் அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த சாலிகிராமத்தில் இருக்கும் உணவகத்தில் மட்டும் சாம்பார் , ரசம் , மோர் , கூட்டு .பொரியல் என அனைத்து சேர்த்து ரூபாய் 10 மட்டும் தான் என்ன நமப முடியவில்லை ஆனால் உண்மை தான்.
இதில் அளவு சாப்பாடு ரூபாய் 10 அளவில்லா சாப்பாடு ரூபாய் 30 ஆகும் இந்த உணவகத்தின் உரிமையாளர் வீரபாகுவிடம் கேட்டபோது ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் அதனை முன்னிட்டு மக்களுக்கு இந்த சேவையை செய்துவருகிறேன் அதனால் இனத்தால் உணவகத்திற்கு “உழைப்பாளர் உணவகம்” என்று பெயர் வைத்துள்ளேன்.