CINEMA
அடுத்து ரெடியா இருங்க….! பா.ரஞ்சித் இயக்கத்தில் கமெர்சியல் படம்… வெளியான அப்டேட்..!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் மிரட்டலாக நடித்துள்ளார்கள். இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் அருமையாக இருந்தது. படம் உலக அளவில் 50 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்த நிலையில் தங்கலான் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் பேசினார்.
அப்போது, அடுத்து ரெடியா இருங்க. நமக்கு பெரிய பட்ஜெட்ல முழுக்க முழுக்க கமர்சியல் படம் பண்றோம் .ஒரு பெரிய ஹீரோவை நான் கூட்டிட்டு வரேன். நான் உங்களை நம்புகிறேன் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னிடம் கூறினார்.