CINEMA
கிளம்பியது சர்ச்சை…. மோதிக்கொள்ளும் தனுஷ்-SK ரசிகர்கள்…. மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் பிரச்சினை…!!

இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் தன்னுடைய அடுத்த படமாக கொட்டுகாளிப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி பழகிவிட்டார்கள் என்று பேசியது தற்போது சர்ச்சை கிளப்பி உள்ளது. சிவகார்த்திகேயன் இதன் மூலமாக நடிகர் தனுஷை குறி வைத்து கூறுகிறார் என்ற பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெரினா படத்தில் நடித்து அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார். தனுஷ் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன், அனிருத், ரோபோ சங்கர் முக்கியமானவர்கள். 2013 ஆம் வருடம் வெளியான எதிர்நீச்சல் படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த படத்தை தனுஷ் தயாரித்தார். னால நண்பர்களாக வலம் வந்தார்கள். இதனையடுத்து இருவரும் எந்த நிகழ்ச்சியிலும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை. இருவரும் பொது வெளியில் அவர்களைப் பற்றி பேசுவதையும் நிறுத்திக் கொண்டார்கள் . இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்தார்கள். இந்த பிரச்சனை தற்பொழுது தேவை இல்லாமல் சர்ச்சை பேச்சால் மீண்டும் எரிய தொடங்கியுள்ளது. இணையத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் யார் சரி என்று வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.