CINEMA
like பண்ணும் தனுஷ்…. பிரிவுக்கு பின் இணைகிறார்களா…..? குட் நியூஸ் சொன்ன பிரபலம்…!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தற்போது உள்ளது ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ஆனால் தமிழ் படங்களே இவருக்கு பெரும் அளவில் வரவேற்பை பெற்று தந்து வருகிறது. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா-வை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடைசியாக ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார்.
தற்போது தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனால் இருவரும் விவாகரத்து பெற போகிறார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு சந்தோஷமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது வலைப்பேச்சு டீம் தனுஷ் ஐஸ்வர்யா குறித்து பேசுகையில், தனுஷ் இப்பொழுது ஐஸ்வர்யா போடும் அனைத்து போஸ்ட்களும் லைக் போடுவதாகவும் சமீபத்தில் கூட அவர் ஓணம் பண்டிகை முன்னிட்டு சாப்பாடு சாப்பிடுவது போல ஐஸ்வர்யா போட்ட போஸ்டிற்கு தனுஷ் லைக் போட்டுள்ளார். இதனால் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் விரைவில் சேர்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளனர்.