LATEST NEWS
துணிவு படத்தில் அஜித் டூப் பயன்படுத்தினாரா?…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க போனி கபூர் வெளியிட்ட வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் ஏச்சு வினோத் இயக்கத்தில் அண்மையில் வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் பல காட்சிகளில் டூப் பயன்படுத்தி காட்சிகளை முடித்தார் என தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இதனை அறிந்தும் மீடியாவில் இருந்து எப்போதும் விலகி இருக்கும் அஜித் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில் துணிவு படம் குறித்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக போனி கபூர் ஒரு விஷயம் செய்துள்ளார். அதாவது துணிவு மேக்கிங் வீடியோவை பதிவிட்டு டூப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் அஜித் தான் சண்டை காட்சிகளில் நடித்தார் என காட்டத்தான் இந்த வீடியோவை வெளியிட்டார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்
https://twitter.com/BoneyKapoor/status/1619319917790244864