VIDEOS
“அறிவில்லையா உனக்கு, இன்னொருத்தன் கால்ல விழுறது எவ்வளவு பெரிய அடிமைத்தனம்”.. கொந்தளித்த இயக்குனர் பா. ரஞ்சித்… தீயாய் பரவும் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இமயமலை சுற்றுப்பயணம் சென்ற ரஜினி சமீபத்தில் உத்திரபிரதேசம் சென்றார். அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் திரைப்படத்தை பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் யோகி ஆதித்யநாத் வராததால் அந்த மாநில துணை முதல்வருடன் ரஜினி ஜெயிலர் திரைப்படம் பார்த்தார்.
பிறகு உத்திரபிரதேச மாநில முதல்வரை சந்திக்க நேரில் சென்ற ரஜினி அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஜினிக்கு தற்போது 72 வயது ஆகும் நிலையில் 51 வயதான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி வழங்கியதை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா மற்றும் கபாலி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் காலில் விழுவது பற்றி ஆவேசமாக பேசிய ஒரு பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில், ஏன் கால்ல விழுற, அறிவில்லையா உனக்கு. இன்னொரு தன் கால்ல விழுறது எவ்வளவு பெரிய அடிமைத்தனம். இதனை நீ ஏன் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறாய். உன் அப்பா அம்மா காலை தவிர வேறு எவன் கால்லயும் விழாத என்று பா.ரஞ்சி தாவே சத்துடன் பேசும் ஒரு பழைய வீடியோ தற்போது ரஜினியின் சூழலுக்கு ஒத்து போவதாக கூறி நெட்டிசன்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Vera vazhi Therila tag panida vendiyathu thaan @rajinikanth pic.twitter.com/OSOgYuAupw
— CSK (@CSK_myspace) August 19, 2023