LATEST NEWS
விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட இயக்குனர் வம்சியின் மனைவி, மகள்…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் வம்சி. இவர் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவரின் இயக்கத்தில் அண்மையில் விஜய் தளபதி நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இந்த திரைப்படத்தின் வெற்றியை பட குழுவுடன் இணைந்து விஜய் கொண்டாடினார்.
அந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களும் இணையத்தில் வைரலான நிலையில் இந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் வம்சியின் குடும்பமும் கலந்து கொண்டுள்ளது. அப்போது இயக்குனர் வம்சி தனது மனைவி மற்றும் மகளுடன் விஜய் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.