CINEMA
G.O.A.T படம் மங்காத்தாவை மிஞ்சிவிடும்…. இயக்குனர் வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட் விஷயம்….!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் கோட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாக இருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா,உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த படம் மங்காத்தாவை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். அதாவது, இது என்ன கதைக்களம் என்பதை ட்ரைலரில் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. எல்லோருக்கும் பிடிக்கும் விதமாகவும் புரியும் விதமாகவும் இந்த படம் இருக்கும். படத்தை எந்த இடத்திலையும் யாரையும் குழப்பும் அளவிற்கு எடுக்கவில்லை.
ஆனால் இந்த காட்சிக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை உங்களால் சொல்ல முடியாது. இதை நான் சவாலாக சொல்கிறேன். ஆனால் இந்த படம் முழுவதும் குடும்ப படமாக இருக்கும். காந்தி என்ற ஒரு தனி நபர் வாழ்க்கையில் நடந்த ஒரு கதை. இந்த படத்தில் என்ன நடக்குது என்று தோன்றாமல் அனைவருக்கும் புரியும் வகையில் இருக்கும். இந்த படம் மங்காத்தாவை மிஞ்சும் அளவுக்கு இருக்கும். மங்காத்தா படம் உணர்ச்சிபூர்வமான படமாக இல்லாமல் முழுவதும் பாய்ஸ் சம்பந்தப்பட்ட படமாகவும் துரோகத்தை காட்டும் படமாகவும் இருக்கும் என்று பேசியுள்ளார்.