இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?…. வெளியானது ஓட்டிங் விவரம்….!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?…. வெளியானது ஓட்டிங் விவரம்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 80 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவாணன், ஏ டி கே மற்றும் மணிகண்டன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இவர்களில் தற்போது வரை குறைவான வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் மணிகண்டன் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு முந்தைய இடத்தில் ஏடிகே இருப்பதால் கட்டாயம் மணிகண்டன் மற்றும் ஏ டி கே என இவர்களில் ஒருவர் தான் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் யார் வெளியேறப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in