LATEST NEWS
“இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக”… சன் டிவியில் ஒலிக்கும் இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?… வெளியான புகைப்படம்..!!
பொதுவாகவே தமிழ் சின்னத்திரையில் மக்கள் மனதை கவர்ந்த முன்னணி தொலைக்காட்சியில் முதலிடத்தில் இருப்பது சன் டிவி தான். 90களில் தொடங்கி இன்றுவரை சன் டிவி சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இதில் ஒளிபரப்பாகி வரும் கயல், எதிர்நீச்சல் மற்றும் இனியா உள்ளிட்ட பல சீரியல்கள் தற்போது டிஆர்பி யில் முதலிடத்தில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.
இந்த சீரியல்களுக்கு இடையே சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் தொடர்பாக வாய்ஸ் ஓவரில் குரல் ஒன்று ஒலித்துக் கொண்டிருக்கும். அதாவது இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக என்ற ஒரு குரல் யாராலயும் மறக்க முடியாது. இன்று வரை அனைவரும் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது முதல்முறையாக சன் டிவிக்கு குரல் கொடுக்கும் தூரன் கந்தசாமி என்ற நபரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
