CINEMA
CWC-யின் புதிய தொகுப்பாளராக களமிறங்கும் கோமாளி…. அவர் யார் தெரியுமா…? மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. நான்கு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு தற்போது ஐந்தாவது சீசனில் இருக்கிறது. கடந்த நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து விலகியதோடு அதில் முக்கிய நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்டும் வேறு தொலைக்காட்சிக்கு தாவி உள்ளார். இந்த நிலையில் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் பிரச்சினை ஏற்பட்ட தற்போது சர்ச்சையாக சமூக வலைதளங்களில் வெடித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு சில போட்டியாளர்களை தவிர மற்ற குக் வித் கோமாளி போட்டியாளர்கள் அனைவருமே மணிமேகலை பிரியங்கா என இருவரையும் விட்டுக் கொடுக்காமல் பேசி இருந்தார்கள். இந்நிலையில் புதிய கோமாளி ஒருவர் தொகுப்பாளராக மாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அந்த புதிய தொகுப்பாளர் குக் வித் கோமாளி புகழ் தான் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த சீசனில் தன்னுடைய திறமையான காமெடி வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.