பிக்பாஸ் வீட்டில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் நடிகை…. செம குஷியில் ரசிகர்கள்…. வெளியான ப்ரோமோ வீடியோ….!!!! - cinefeeds
Connect with us

TRENDING

பிக்பாஸ் வீட்டில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் நடிகை…. செம குஷியில் ரசிகர்கள்…. வெளியான ப்ரோமோ வீடியோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 70 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி 9 போட்டியாளர்களுடன் சென்று கொண்டிருக்கிறது. முதலில் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மீதமுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர். அவ்வகையில் நேற்று மைனா, அமுதவாணன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினரை பிக் பாஸ் வீட்டில் சந்தித்த நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் ரட்சிதாவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் மணிகண்டன் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அவ்வகையில் மணிகண்டனின் மனைவி,மகன் மற்றும் அம்மா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் வருகை தர அவரின் தங்கையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வந்துள்ளார். அது தொடர்பான ப்ரோமோ வீடியோ என்று வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in