பிக்பாஸ் வீட்டில் ரட்சிதாவை பார்க்க வந்த முக்கிய நபர்கள்…. அதுவும் கையில் கிப்ட்டுடன்…. வெளியானது இன்றைய ப்ரோமோ….!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

பிக்பாஸ் வீட்டில் ரட்சிதாவை பார்க்க வந்த முக்கிய நபர்கள்…. அதுவும் கையில் கிப்ட்டுடன்…. வெளியானது இன்றைய ப்ரோமோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 70 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி 9 போட்டியாளர்களுடன் சென்று கொண்டிருக்கிறது. முதலில் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் நேற்று மீதமுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர்.

அவ்வகையில் நேற்று மைனா, அமுதவாணன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினரை பிக் பாஸ் வீட்டில் சந்தித்த நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ரட்சிதாவின் அம்மா மற்றும் குடும்பத்தினர் வருகை தர கண்கலங்கி அழுகின்றனர். மேலும் ரட்சிதாவுக்கு அவரின் அம்மா ஒரு புகைப்படத்தை கொடுக்க அதைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்து அம்மா கையால் சாப்பிட்டு அவரின் மடியில் படுத்து உறங்குகிறார் ரட்சிதா. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in