LATEST NEWS
திருமணத்திற்கு முன்பு ஒன்றாக போட்டோ ஷூட் நடத்திய…. கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஜோடி…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம் மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 10 தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தது. இதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்காத நிலையில் அண்மையில்கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ சூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க