CINEMA
அட அப்படியா…? நடிகர் விஜய்யின் G.O.A.T படத்தின் கதை இதுதானாம்…. லீக்கான தகவல்…!!

தமிழ் திரையுலகில் மிகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தளபதி விஜய் என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது கோட் படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தையடுத்து எச்.வினோத் இயக்கம் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது அவருடைய 68வது படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யா என்று பல இடங்களிலும் நடந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலும் வெளியானது.
சமீபத்தில் கூட இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. பாடல்கள் பெரிதளவில் ரசிகர்களால் கவரப்படவில்லை என்றாலும் படத்தின் மீது படக்குழு மாபெரும் நம்பிக்கை வைத்துள்ளார்களாம். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டு கதை சுருக்கம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2024 மாஸ்கோவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாகி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
அதன்படி மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற ஒரு கதாபாத்திரம் நியமிக்கப்படுகிறது. இதை விஜய் எப்படி தடுத்து நிறுத்துகிறார்? அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற வந்தவர் யார்? இதன்பின் யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்பது தான் படத்தின் கதை என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை.