“பஸ் கூட்டமா இருக்கு கீழ இறங்குங்க..!” மறுத்த 8 மாணவிகளை கொடூரமாக தள்ளிவிட்ட அரசு பேருந்து கண்டெக்டர்..! அராஜகத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் கொழுந்துவிட்டு எரியும் போராட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பஸ் கூட்டமா இருக்கு கீழ இறங்குங்க..!” மறுத்த 8 மாணவிகளை கொடூரமாக தள்ளிவிட்ட அரசு பேருந்து கண்டெக்டர்..! அராஜகத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் கொழுந்துவிட்டு எரியும் போராட்டம்..!!

Published

on

புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள்சத்திரம் பகுதியில் பள்ளிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறிய 8 பழங்குடியின மாணவிகள், நடத்துநரால் கீழே தள்ளிவிடப்பட்டதாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. பேருந்தில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால் மாணவிகளை இறங்குமாறு நடத்துநர் கூறியுள்ளார். எனினும், பள்ளிக்கு நேரமாவதால் கீழே இறங்க மாணவிகள் மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த நடத்துநர் அவர்களை வலுக்கட்டாயமாகப் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் காயமடைந்த மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், மாணவர்களைத் தாக்கிய நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in