“2ஆவதும் பொம்பள பிள்ளை” பேத்தியையே பிறந்த சில மணி நேரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்ற பாட்டி… கொலை நடுங்கவைக்கும் பகீர் வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“2ஆவதும் பொம்பள பிள்ளை” பேத்தியையே பிறந்த சில மணி நேரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்ற பாட்டி… கொலை நடுங்கவைக்கும் பகீர் வாக்குமூலம்..!!

Published

on

பவானி அருகே உள்ள பகுதியில் பிரியதர்ஷினி என்பவருக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்ததால், குடும்ப வறுமையைக் காரணம் காட்டி அக்குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குழந்தையின் பாட்டி தங்கமணி (47) என்பவரைத் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

குழந்தையின் மர்ம மரணம் குறித்து நடத்தப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கையில், குழந்தை மூச்சுத்திணறி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சொந்தப் பேத்தியையே கொடூரமாகக் கொன்ற பாட்டி தங்கமணியைக் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in