LATEST NEWS
CM சார்..! உங்க மகன் உங்க கூட இல்ல.. ஆனா எங்க அப்பாவுக்கு அப்படியில்ல… திமுக MLA மார்க்கண்டேயன் மகன் கண்ணீர் மல்க முதல்வர் விஜய்க்கு கோரிக்கை..!!
விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம், தமிழக முதல்வர் விஜய் குறித்து ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசியதற்காக சுமார் 13 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவரது மகன் பகிரங்கக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். மேலும், இந்த விசாரணையின் போது தனது தந்தை துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ள செய்தி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது தந்தையின் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையடைந்துள்ள அவர், முதலமைச்சருக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். அதில், “முதலமைச்சர் சார், உங்களுடைய மகன் தற்போது உங்களுடன் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்கள் அப்பா மார்க்கண்டேயன் எனக்காகவும், விளாத்திகுளம் தொகுதி மக்களுக்காகவும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைத்து வருகிறார். அவர் என்றும் எங்களோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்; தயவுசெய்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்” எனக் கண்ணீர்மல்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகார வர்க்கத்தின் இந்த அதிரடி விசாரணையும், அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ-வின் மகன் வெளியிட்டுள்ள இந்த நெகிழ்ச்சியான வீடியோ பதிவும் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஒரு மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்ற கேள்வியையும், முதலமைச்சரை நோக்கி எழுப்பப்பட்டுள்ள இந்த நேரடிக் கோரிக்கை அதிகாரம் சார்ந்த விவாதங்களையும் மீண்டும் சூடாக்கியுள்ளது.
