LATEST NEWS
காலையிலேயே ஷாக்.! ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.. எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு செக் வைத்த நீதிமன்றம்..!!
கரூர் அருகே சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார். சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தித் தொடர்ந்த இவ்வழக்கில், நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜரான அவருக்கு வழக்கம் போல் குற்றப்பத்திரிகை நகல் முறைப்படி வழங்கப்பட்டது.
வழக்கின் விசாரணை நகல்களைப் பெற்றுக் கொண்டதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த நில மோசடி வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்கான தேதியைக் குறித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 27-ம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
