காலில் சர்ஜரி செய்யப்பட்ட ஆல்யா மானசா இப்போ எப்படி இருக்காங்க?…. அவரது கணவர் போட்ட பதிவு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காலில் சர்ஜரி செய்யப்பட்ட ஆல்யா மானசா இப்போ எப்படி இருக்காங்க?…. அவரது கணவர் போட்ட பதிவு….!!!!

Published

on

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது மீண்டும் புதிய சீரியலில் நடிக்க ஆலியா கமிட் ஆகியுள்ளார். அதாவது சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடிக்கின்றார். அந்த சீரியல் அண்மையில் தான் தொடங்கியது. இந்நிலையில் சமீபத்தில் காலில் அடிபட்டு பெரிய கட்டு போட்டபடி ஒரு வீடியோவை ஆலியா மானசா பதிவிட்டு இருந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து அவருக்கு நேற்று காலையில் சர்ஜரி நடந்துள்ளது. தற்போது அவரது சர்ஜரி நல்லபடியாக முடிந்துள்ளது என்றோம் விரைவில் அவர் அதிலிருந்து மீண்டு வருவார் என்றும் ஆலியா மானசாவின் கணவர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in