வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி… நள்ளிரவில் கடித்த விஷப்பாம்பு… கதறித் துடித்த குடும்பம்.. பரிதாபமாக பறிபோன உயிர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி… நள்ளிரவில் கடித்த விஷப்பாம்பு… கதறித் துடித்த குடும்பம்.. பரிதாபமாக பறிபோன உயிர்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மசூரி காவல் எல்லைக்குட்பட்ட பயானா கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு 15 வயதான சாக்ஷி என்ற சிறுமி தனது வீட்டில் எச்சில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது, கருநாகப் பாம்பு ஒன்று அவளது கையில் கடித்துள்ளது. உடனடியாக குடும்பத்தினர் அவளை சிகிச்சைக்காக பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சோகமான விஷயம் என்னவென்றால், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சாக்ஷியின் தாயாரும் பாம்புகடித்தே உயிரிழந்திருந்தார்.

ஷ்ரவண மாதத்தில் பாம்புகள் வழிபடப்பட்டாலும், காசியாபாத் பகுதியில் கடந்த 15 நாட்களில் மட்டும் 18 பேரை பாம்புகள் கடித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்ததால் 12 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆனால், மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் செல்லப்பட்டதால் சாக்ஷி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் கன்வரியாக்கள் முகாமில் பாம்பு கடித்து இறந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

மழைக்காலத்தில் குழிகள் மற்றும் பொந்துகளில் நீர் நிரம்புவதால், பாம்புகள் மற்றும் தேள்கள் போன்ற நச்சு உயிரினங்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி நிலத்தடியிலிருந்து வெளியேறி வயல்கள், புதர்கள், வடிகால்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன. இரவில் இருட்டாக இருப்பதால் இவை கண்ணுக்குத் தெரியாமல் மனிதர்களைக் கடித்து விடுகின்றன என்று காசியாபாத் மாவட்ட கால்நடை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.பி. பாண்டே தெரிவித்துள்ளார். பாம்பு கடித்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், நஞ்சை முறித்து உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in