LATEST NEWS
அம்மாடியோ இத்தனை கோடியா?…. சமந்தாவை மிஞ்சிய நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு…. எவ்வளவு தெரியுமா….????

ஹிந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம்ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் மற்றும் அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அது மட்டுமல்லாமல் தனது மெல்லிடையால் ரசிகர்களின் கனவு கண்ணியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் தமன்னா தற்போது பெரிய ஹீரோ படங்களில் எதுவும் கமிட்டாகவில்லை.கடந்த சில நாட்களாகவே மலையாள படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி நிலையில் தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தமன்னாவின் முழு சொத்து மதிப்பு குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது நடிகை தமன்னாவின் இன்றைய முழு சொத்து மதிப்பு மட்டும் சுமார் 110 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது சமந்தாவின் இன்றைய சொத்து மதிப்பை விட அதிகம் எனவும் கூறப்படுகிறது.