LATEST NEWS
“ஷாருக்கானை உயிரோடு எரித்து விடுவேன்”…. புதிய சர்ச்சையை கிளப்பிய முக்கிய பிரபலம்…. என்ன காரணம்….????

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் தற்போது ஷாருக்கான் உடன் பதான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் அப்படத்தின் Besharam rang என்ற பாடல் வெளியாகி உள்ளது. அந்தப் பாடலில் தீபிகா படுகோனே பிகினி உடையில் கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்டுள்ளார். தீபிகா படுகோன் காவி பிகினி ஆடை அணிந்தும் ஷாருக்கான் பச்சை நிற ஆடை அணிந்தும் கவர்ச்சியாக இந்து சமயத்தை அவமானப்படுத்துவதாக சிலர் புகார் அளித்து கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்கள் இன்று இந்த பாடலை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம், இப்போது ஷாருக்கானின் உருவ பொம்மையை தான் எரித்துள்ளோம்,ஒருவேளை எனக்கு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் உயிரோடு எரித்து விடுவேன் என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரிய மகாராஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.