LATEST NEWS
“நான் கொஞ்சம் கூட சந்தோசமா இல்ல”…. கௌதம் கார்த்திக் – மஞ்சிமா திருமணத்திற்கு…. நடிகை கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு…!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம் மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 10 தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தது. இதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்காத நிலையில் அண்மையில்கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதே சமயம் நவம்பர் 28ஆம் தேதி எங்களுக்கு திருமணம் என இருவரும் அண்மையில் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று விமர்சையாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இன் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் உள்ளிட்ட பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை போட்டு உள்ளார். அந்தப் பதிவில்,திருமணத்திற்கு தன்னால் வர முடியவில்லை என்பதை நினைத்து நான் சந்தோசமாக இல்லை அம்மு,உன்னுடைய சிறப்பான நாளில் இந்த சமயத்தில் உன்னோடு நான் இல்லை என்று கூறி இருவருக்கும் தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/KeerthyOfficial/status/1597135411050008577