TRENDING
என்னது.. ‘லியோ’ படத்துல நடிகை பிரியா ஆனந்த் இருக்காங்களா…? ட்ரைலரில் இதை நீங்க கவனிச்சீங்களா…?
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரெட் நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரியா ஆனந்த். வாமனன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த எதிர்நீச்சல் படம் அவருக்கு ஜாக்பாட் படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, LKG என தொடர்ந்து நடித்த இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டது தளபதியின் ‘லியோ’ ட்ரைலர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ளது. இதன் தொடக்கமாக நேற்று முன்தினம் ட்ரைலர் வெளியிடப்பட்டது. டிரெய்லரின் தொடக்கத்தில் ஒரு சீரியல் கில்லர் பற்றிய கதையை சொல்லும் விஜய், ரவுடிகளிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கும் பல காட்சிகள் வருகிறது. ஒரு கட்டத்தில் என் குடும்பத்தை ஏன் தாக்குறீங்க என்று கேட்டு ஆக்ஷனில் இறங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து டிரெய்லர் ஆக்ஷன் அதளகமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடைசியில் இதுக்குமேல சொல்லனும்னா லியோ தான் உயிரோட வந்து சொல்லலும் என்று கௌதம்மேனன் பேசுவதுடன் டிரெய்லர் முடிவடைகிறது. 2.43 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த டிரெய்லர் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ள நிலையில், பல கோடி வியூக்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது இந்த ட்ரைலர். தற்பொழுது இந்த ட்ரைலர் வீடியோவில் இந்த விஷயத்தை நீங்க கவனிச்சீங்களா?. அதாவது ட்ரைலர் வீடியோவில் தளபதி குடையை பிடித்திருக்க அவரின் பின்னால் மறைந்தவாறு நடிகை பிரியா ஆனந்த் வருகிறார். இதோ ட்ரைலர் வீடியோ…
[irp]