CINEMA
இரண்டாவது திருமணம்….? மாலையும் கழுத்துமாக விக்னேஷ் கார்த்திக்…. ஷாக் ஆன ரசிகர்கள்….!!

தமிழ் திரை உலகில் நடிகரும் இயக்குனருமாக அறியப்பட்டவர் விக்னேஷ் கார்த்திக். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
அதேப்போன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வணக்கம் தமிழா நிகழ்ச்சியையும் விக்னேஷ் கார்த்திக் தொகுத்து வழங்கியுள்ளார். ஏராளமான குறும்படங்களை விக்னேஷ் கார்த்திக் இயக்கியதோடு சிலவற்றில் நடிக்கவும் செய்துள்ளார்.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான படம் தான் “திட்டம் இரண்டு”. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இது விக்னேஷ் கார்த்திக்கிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதோடு ஜிவி பிரகாஷ் நடித்து விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்த அடியே திரைப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி வாகை சூடியது. இவ்வாறு இயக்குனராகவும் நடிகராகவும் வளர்ந்து வருகிறார் விக்னேஷ் கார்த்திக்.
இந்நிலையில் விக்னேஷ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை பிரிகிடா சாகாவுடன் கழுத்தில் மாலையுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை தான் விக்னேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ளார்.
இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் விக்னேஷ் கார்த்திக்கிற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு தான் திருமணம் முடிந்தது. இந்த சூழலில் திருமண கோலத்தில் விக்னேஷ் கார்த்திக் – பிரிகிடா சாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆனால் உண்மையில் இது அவர்களது அடுத்த படத்திற்கு தொடர்புடைய புகைப்படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தெரியாதவர்கள் விக்னேஷ் கார்த்திக்கிற்கு இரண்டாவது கல்யாணமா என்று தான் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.