CINEMA
தனியாக மும்பைக்கு சென்ற ஜெயம் ரவி…. விமான நிலையத்தில் அவர் சொன்ன விஷயம்…. என்ன தெரியுமா..??

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் மோகன் ராஜ் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் கடந்த 2009 ஆம் வருடம் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சுமார் 15 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது இவர் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் ஜெயம் ரவி, எனக்கென்று தனியாக வங்கி கணக்கு இல்லை. வீட்டு வேலையாட்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு இல்லை. ஒவ்வொரு சின்ன செலவுக்கும் ஆர்த்தி என்னை கேள்வி கேட்டு அவமானப்படுத்தினார். என் மாமியார் தொடர்ந்து என்னை வைத்து படங்களை தயாரித்து நஷ்ட கணக்கை காட்டி ஏமாற்றினார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஜெயம் ரவி மும்பை சென்றடைந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாலிவுட் உலகில் உள்ள தயாரிப்பாளர்களுடன் தான் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகவும், தற்போது தன்னுடைய அலுவலகத்தை மும்பைக்கு மாற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
https://twitter.com/i/status/1839599256769814901