என் புருஷனுக்கு 100 மார்க் மேல தான்…. இப்படி சொன்ன 1 வருஷத்துல Divorce ஆ….? ஷாக்கில் ரசிகர்கள்…!! - cinefeeds
Connect with us

CINEMA

என் புருஷனுக்கு 100 மார்க் மேல தான்…. இப்படி சொன்ன 1 வருஷத்துல Divorce ஆ….? ஷாக்கில் ரசிகர்கள்…!!

Published

on

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் இப்படி திடீரென்று விவகாரத்து செய்து விட்டார்களே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஜெயம் ரவியுடன் ஆர்த்தி அளித்திருந்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் ஆர்த்தி, நான் கர்ப்பமாக இருக்கும்போது வாந்தி எடுத்தேன் என்றால் அதை கையில் தாங்கி பிடிப்பார். மூன்று மணிக்கு நான்கு மணிக்கு ஏதாவது சாப்பிடணும்னு சொன்னா எழுந்து வருவார். அடுத்த நாள் சூட்டிங் பத்தி கூட யோசிக்க மாட்டார். ஒரு கணவரா 100 மார்க் மேல தான் போடுவேன். ஒரு கணவரா மற்ற எல்லாரும் அவரை மாதிரி இருக்கணும் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் ஒரு வருடத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டார்களே என்று புலம்பி வருகிறார்கள்.

Advertisement