LATEST NEWS
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகும் கமல்ஹாசன்?…. இனி அவருக்கு பதில் இவர்தானாம்…. வெளியான தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர்.இவர் தசாவதாரம் திரைப்படத்தின் 9 கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். பல வருடங்களுக்குப் பிறகு உண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய 2 திரைப்படத்தின் நடித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கமல்ஹாசன் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கமல்ஹாசன் குணமடைந்து வருகிறார் எனவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் கூறி இருந்தனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களில் கமல்ஹாசன் வீடு திரும்பினாலும் வருகின்ற சனிக்கிழமை என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனின் போது கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் அல்லது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.