LATEST NEWS
15 வருடங்களுக்குப் பிறகு குழந்தை பெற்ற நடிகர் நரேன் தம்பதி…. என்ன குழந்தை தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் நரேன்.இவர் நிழல் குத்து என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் தனது திறமையான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தினார். அதனால் தமிழில் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இவரை ஹீரோ ஆக்கினார் மிஷ்கின். அதுதான் அவரின் முதல் திரைப்படம்.தமிழில் அந்த திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி இவர் நடிப்பில் வெளியான நெஞ்சிருக்கும் வரை,பள்ளிக்கூடம் மற்றும் அஞ்சாதே போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன.
இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்ததால் தமிழில் பட வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கின. இருந்தாலும் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அசத்தி இருந்தார்.
நரேன் மற்றும் அவரின் மனைவி மஞ்சு ஹரிதாசுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு தற்போது 14 வயது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரேனின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் ஆகி 15 வருடங்கள் கழித்து தான் இரண்டாம் குழந்தை அவர்களுக்கு பிறந்துள்ளது. இதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நரேன் பகிர்ந்து உள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
