LATEST NEWS
சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்?…. அதற்கு காரணம் இதுதான்…. கேட்டதும் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். இதனை தவிர்த்து ஜெயம் ரவி நடிப்பில் சைரன் திரைப்படத்திலும் தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக தனது குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு அவர் ஓகே சொல்லியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் மஞ்சள் நிற சுடிதார் அணிந்தபடி கீர்த்தி சுரேஷ் கோவிலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது.
இந்நிலையில் தற்போது அவர் கமிட்டாகி உள்ள நான்கு படங்களுக்குப் பிறகு எந்த ஒரு திரைப்படத்தையும் கீர்த்தி சுரேஷ் கமிட் செய்யவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர் விரைவில் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் அவரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக இணையத்தில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது.