LATEST NEWS
விஜய் FANS எல்லாரும் ரெடியா இருங்க… லியோவை OTT-யில் வெளியிட முடிவு… தேதியை அறிவித்த படக்குழு…!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் இரண்டாவது கூட்டணியான ‘லியோ’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக அக்டோபர் 19 அன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் தளபதி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
லியோ’ படம் வெளியான முதல் நாளில் 140 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் வார இறுதியில் 461 கோடி வசூல் செய்துள்ளதாக ‘லியோ’ படத்தின் தயாரிப்பாளரான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், படம் 6 நாட்களில் 500 கோடியை எட்டியதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று தெரிய வந்துள்ளது. அதேபோல், குறைந்த நாட்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘லியோ’ படைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக ‘லியோ’ படத்தின் வசூல் குறைய ஆரம்பித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சில திரையரங்க உரிமையாளர்களும் லியோ படத்தால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். மேலும், படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களும், சில இணையதளங்களில் படம் சட்டவிரோதமாக வெளியானதும் படத்தின் வசூலை பாதித்துள்ளது .
இந்நிலையில் லியோவின் OTT ரிலீஸ் தேதி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. இந்த சூழலில் ‘லியோ’ படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix பெற்றுள்ளதால், நவம்பர் 21-ம் தேதி OTT தளத்தில் லியோ படம் வெளியாகும் என கூறப்படுகிறது.இந்த தகவல் உண்மையானதா என்பது விரைவில் தெரியப்படும்.
சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவான ‘லியோ’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.