LATEST NEWS
அவர் கல்யாணம் பண்ணட்டும்…. அதே நாளில் நானும் கல்யாணம் பண்றேன்…. நடிகர் விஷால் ஓபன் டாக்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் லத்தி திரைப்படம் பெரிய அளவில் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது அந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே விஷாலுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் ஆக இருந்த நிலையில் இந்த திருமண நிச்சயதார்த்தம் நின்றது. இதனைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சிக்கு செல்லும் இடங்களில் அனைவரும் விஷால் திருமணம் எப்போது என்ற கேள்வியை மட்டுமே எழுப்புகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து விஷாலிடம் கேட்டதற்கு,தெலுங்கு நடிகர் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளட்டும் அதே நாளில் நானும் திருமணம் செய்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருமணம் குறித்து கேட்டபோது ஆர்யாவுக்கு திருமணம் நடக்கட்டும் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என விஷால் கூறி இருந்த நிலையில் அவருக்கும் தற்போது திருமணம் முடிந்து குழந்தை உள்ளது. இப்படியே நடுங்கிக்கொண்டே போகிறாரே என ரசிகர்கள் அனைவரும் கலாய்த்து வருகின்றனர்.