LATEST NEWS
பொது இடத்தில் கணவருக்கு லிப்லாக்…. மோசமாக ட்ரோல் செய்த நெட்டிசன்கள்…. வேற லெவலில் பதிலடி கொடுத்த நடிகை ஸ்ரேயா….!!!!

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அந்தத் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு முன்னணி நடிகையாக முன்னேறினார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விக்ரம் மற்றும் தனுஷ் சொல்லிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் ஸ்ரேயா நடித்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா தனது கணவருக்கு எல்லோர் முன்பும் லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைப் பார்த்த பலரும் பொது இடத்தில் இப்படியா செய்வது என மோசமாக ட்ரோல் செய்தனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ஸ்ரேயா பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, இது மிகவும் funny ஆக இருக்கிறது. ஒரு ஸ்பெஷலான நேரத்தில் கிஸ் கொடுப்பது நார்மல் என என் கணவர் நினைக்கிறார். அது ஒரு அழகான விஷயம் என நானும் நினைக்கிறேன். ஒரு சாதாரணமான விஷயத்திற்கு ஏன் ட்ரோல் செய்கிறார்கள் என கணவருக்கு புரியவில்லை.
இது பரவாயில்லை. நான் எந்த ஒரு மோசமான கமெண்டுகளையும் படிப்பதில்லை. அதற்கு பதில் அளிப்பதும் கிடையாது. ரோல் செய்வது அவங்க வேலை அதை அவாய்ட் செய்வது என்னுடைய வேலை. நான் செய்ய வேண்டியதை தான் செய்வேன் எனக் கூறி ஸ்ரேயா பதிலடி கொடுத்துள்ளார்.