CINEMA
“முருகனுக்கு அரோகரா” ஒரே ஒரு ட்வீட் போட்டு வலைப்பேச்சுக்கு பதிலடி…. வலுக்கும் பிரச்சினை…!!
நடிகர் யோபு பாபு காமெடி நடிகராக வலம் வந்து நிலையில் நயன்தாராவோடு கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் நடித்துள்ள கோட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் யோகிபாபு மற்றும் அஜித்திற்கு இடையே நடந்த சம்பவம் குறித்து யோகி பாபுவே தங்களிடம் கூறியதாக வலைப்பேச்சு டீம் பரபரப்பை கிளப்பி உள்ளார்கள்.
மேலும் யோகி பாபு ஒரு நடிகரே கிடையாது என்றும் அவர் ஒரு குப்பை என்றும் படு கேவலமான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி பேசி இருப்பது ரசிகர்களை மட்டும் இல்லாமல் சினிமாவில் உள்ள பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யோகி பாபு பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு டீமில் உள்ளவர்களை மறைமுகமாக தாக்கி பேசிய நிலையில் யோகி பாபுவை நேரடியாக வலைப்பேச்சு டீம் கடுமையாக தாக்கி பேசி உள்ளது.
முருகன் கோயிலுக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து குழந்தை மீது சத்தியம் செய்ய வேண்டும் என்ற அளவுக்கு வலைப்பேச்சு டீம் பேசிய நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக “முருக வேல்” ஒன்றை நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எனவே இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
— Yogi Babu (@iYogiBabu) August 28, 2024