CINEMA
முத்தக் காட்சி, படுக்கையறை காட்சிகளிலும் நடிப்பது…. நடிகை மாளவிகா மோகனன் பளீச்…!!

நடிகை மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். மாஸ்டர் படமும் ஹிட்டானதால் பாலிவுட்டில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஊடகமொன்றில் பேசிய அவர், சினிமாவில் முத்தக் காட்சிகளிலும், நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் நடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். நெருக்கமான காட்சிகளை படமாக்கும்போது எல்லா சினிமா படப்பிடிப்பு அரங்கிலும் ஒரு Intimate Coordinator-ஐ நியமிப்பார்கள். எப்படி நடிக்க வேண்டும் என்பதை அவர்கள் சொல்லி கொடுப்பார்கள். கலைஞர்களிடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்றார்.