ஓடும் ரயிலில் இருந்து நடிகர் வினோத்தை தள்ளிவிட்ட “ரஜினிகாந்த்”…. குடிபோதையில் நேர்ந்த விபரீதம்…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஓடும் ரயிலில் இருந்து நடிகர் வினோத்தை தள்ளிவிட்ட “ரஜினிகாந்த்”…. குடிபோதையில் நேர்ந்த விபரீதம்…!!!

Published

on

மலையாளத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த வினோத்தை ரஜினிகாந்த் என்பவர் குடிபோதையில் தள்ளி விட்டதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த நடிகர் கே வினோத். இவர் ரயில் டிக்கெட் பரிசோதராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சினிமா மீது மிகுந்த காதல் இருப்பதால் கிடைக்கும் திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வருவார்.

#image_title

இந்நிலையில் எர்ணாகுளம் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் பணியில் இருந்த போது பயணி ஒருவர் குடிபோதையில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருக்கின்றார். அவரது பெயர் ரஜினிகாந்த். அவரை டிக்கெட் வாங்காததால் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விடுமாறு கூறியிருக்கிறார் வினோத். குடிபோதையில் இருந்த ரஜினிகாந்த் வினோத்தை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதனால் அவர் உயிரிழந்துள்ளார்.

#image_title

அவரின் உடல் ஆற்றுப்பாலத்திற்கு அருகே கிடந்துள்ளது. வினோத்தின் மரணம் குறித்து அறிந்த மலையாளத் திரையுலகினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இவர் மலையாள இயக்குனரான ஆஷிக் அபு என்பவரின் நண்பர் ஆவார். மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நடித்த புலி முருகன், என்னும் எப்பொழுதும் உள்ள படங்களில் எல்லாம் வினோத் நடித்திருக்கின்றார். இவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Advertisement
Continue Reading
Advertisement