LATEST NEWS
மறைந்த மஞ்சுளாவுடன்… அழகிய இரு குழந்தைகள்… இதில் உள்ள பிக் பாஸ் பிரபலம் யார்னு தெரியுமா…?

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான தம்பதிகளாக இருந்தவர்கள் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகும். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்களும்ள், அருண் விஜய் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நடிகை மஞ்சுளா உடல்நல குறைவால் கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார். விஜயகுமாரின் மகன் மற்றும் மகள்களும் சினிமாவுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
இதில் மூத்த மகளான வனிதா நடிகர் விஜயுடன் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு சரிவர சினிமா வாய்ப்புகள் வராததன் காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இதனையடுத்து வனிதா, ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.இந்த திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது.
இதன் பின் இரண்டு மகள்களையும் அவர் தனியாகவே வளர்த்து வந்தார். சினிமா வாய்ப்பும் இல்லாமல் இருந்த வனிதா விஜயகுமார் கடந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இந்த சீசனில் கலந்து கொண்ட பொழுது இவரின் மகள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த பொழுது மக்களின் மனதை ஈர்த்தனர்.வனிதா விஜயகுமார் தனது instagram பக்கத்தில் அவ்வப்பொழுது தனது மகள்களின் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இதனை தொடர்ந்து தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் 7 போட்டியில் வனிதாவின் மகள் ஜோதிகா பங்கேற்றுள்ளார். இந்த சீசனில் உள்ள போட்டியாளர்களில் ஸ்ட்ராங்கான பிளேயராக கருதப்படுபவர்களுள் ஜோவிகாவும் ஒருவர். இதனாலயே அவருக்காக சமூக வலைதளங்களை ஜோதிகா ஆர்மி என்று உருவாகி அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
தற்பொழுது வனிதாவின் அம்மாவான மஞ்சுளாவுடன் ஜோவிகாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் மஞ்சுளாவின் மடியில் ஜோவிகா இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த புகைப்படத்தில் இரு ககுழந்தைகள் மஞ்சுளாவுடன் உள்ளனர். இதனால் புகைப்படத்தில் இருக்கும் இரு குழந்தைகளில் பிக் பாஸ் ஜோவிகா யார்? என்ற கேள்வியுடன் புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.